தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்எஸ் ஷர்மிளா நியமனம்! சூடிபிடிக்கும் அரசியல் களம்! - ஆந்திரா காங்கிரஸ் தலைவர்

ஆந்திர பிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார்.

YS Sharmila
YS Sharmila

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 16, 2024, 4:51 PM IST

அமராவதி : ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை, அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் வெளியிட்டுள்ளார். அதில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாகவும், இது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்து பதவியை ராஜினாமா செய்துள்ள கிடுகு ருத்ரராஜு, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவராக இருந்த ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, கடந்த 4ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இதையடுத்து, தனது கட்சியையும் காங்கிரசோடு இணைத்து விட்டதாக ஷர்மிளா தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாக, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த கிடுகு ருத்ர ராஜு தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த நகர்வுகளை அடுத்து, ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி நியமிக்கப்படுவார் என செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ். ஷர்மிளா நியமிக்கப்பட்டு உள்ளார். ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி உள்ளார். அவரது சகோதரியான ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டி, அவருக்குப் போட்டியாக காங்கிரஸ் தலைவராக களமிறக்கப்பட்டு உள்ளது ஆந்திர அரசியல் களத்தில் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

விரைவில் மக்களவை தேர்தலுடன், ஆந்திர மாநிலத்திற்கும் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த திடீர் அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க :மல்லையா, நிரவ் மோடியை நாடு கடத்துவதில் துரிதம்! லண்டன் செல்லும் இந்திய புலனாய்வு அதிகாரிகள்!

ABOUT THE AUTHOR

...view details