ஹைதராபாத்:அரசுத்துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்பும் வகையில், தெலங்கானா அரசுப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் தேர்வு நடைபெற்ற நிலையில், வினாத்தாள் வெளியானதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், சந்திரசேகர ராவ் தலைமையிலான அரசு மீது எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை (ஏப்ரல் 24) சிறப்பு புலனாய்வுக் குழு (SIT) அலுவலகத்துக்கு ஒய்.எஸ்.ஆர்.டி.பி கட்சியின் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா செல்ல உள்ளதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார், ஷர்மிளாவை தடுத்து நிறுத்தினார். இதனால் போலீசாருக்கும் - ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.