பாட்னா :தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக போலீ வீடியோக்களை பரவ விட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட மணிஷ் காஷ்யப் 6 வழக்கில் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உள்ளது.
தமிழ்நாட்டில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கபடுவதாக போலி வீடியோக்களை பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யாப்புக்கு பாட்னா சிவில் நீதிமன்றத்தில் நிவாரணம் வழங்கி உள்ளது. இதையடுத்து பாட்னாவின் பீர் சிறையில் அவர் அடைக்கபப்ட உள்ளதாகவும் தமிழகத்திற்கு இனி அனுப்பப்பட மாட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதேநேரம் தமிழ்நாடு போலீசார் மற்றும் நீதிமன்றம் அவரை விசாரிக்க விரும்பினால் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை செய்யலாம் என பாட்னா சிவில் நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. தமிழகத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பான போலி வீடியோக்களை வெளியிட்டது உள்பட பல வழக்குகளில் கைது செய்யப்பட்ட யூடியுபர் மணீஷ் காஷ்யாப் பீகாரின் பியூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.