தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இறந்த காதலியை திருமணம் செய்த இளைஞர் - கடைசிவரை திருமணம் செய்ய மாட்டேன் என உறுதிமொழி - இறந்த பெண்ணை திருமணம் செய்த இளைஞர்

அசாம் மாநிலத்தில் உயிரிழந்த தனது காதலியின் சடலத்தை திருமணம் செய்துகொண்ட காதலன், வாழ்க்கை முழுவதும் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என உறுதிமொழி எடுத்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 19, 2022, 6:31 PM IST

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்த காதலியை திருமணம் செய்த காதலனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 27 வயதான பிடுபன் என்ற இளைஞரும், பிரத்தனா போரா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர்.

இவர்களது காதல் இருவரது வீட்டாருக்கும் தெரியவந்த நிலையில், குடும்பத்தார் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்திருந்தனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரத்தனா போராவுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த பெண், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த காதலன், தனது காதலியின் இறப்பு சடங்கிற்கு வந்து அனைவரது முன்னிலையில் உயிரிழந்த காதலியின் சடலத்திற்கு மாலை அணிவித்து திருமணம் செய்துகொண்டார்.

மேலும், தனது மனைவி நீ மட்டும் தான் என்றும் வாழ்க்கை முழுவதும் உன்னை மட்டும் நினைத்துக்கொண்டு திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கப்போவதாகவும் தனது காதலியின் சடலத்தின் மீது சத்தியம் செய்துள்ளார்.

இது குறித்து பெண்ணின் உறவினர் கூறுகையில், “ இளைஞர் பிடுபன், வரும்போதே திருமணத்திற்குத் தேவையானவற்றை கொண்டு வந்து பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இது கனவுபோல் இருந்தது.

இருந்தபோதிலும், அப்பெண் ஆசைப்பட்டது போல தனது காதலனை திருமணம் செய்துகொண்டார். அங்கிருந்த அனைவரும் இவர்களது காதலனைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர்” என்றார்.

இதையும் படிங்க:பேஸ்புக்கில் பழக்கம்... ஒரு தலை காதல்... கேரள பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

ABOUT THE AUTHOR

...view details