திருவனந்தபுரம்:கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ளது நெய்யாறு அணை. நெய்யாறு அணைக்கு அருகே இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்து காணொலி எடுத்து வந்துள்ளனர்.
அப்போது, அங்கு வந்த இருசக்கர வாகனத்திற்கு குறுக்கே வந்த ஒரு இளைஞருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது.
இளைஞருக்குக் காலில் படுகாயம் ஏற்பட்டதை அறியாத பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் காயமுற்ற இளைஞரை கடுமையாக தாக்கினர். அந்த இளைஞர், கால் வலியால் துடிப்பதை அறிந்த பின்னரே அவரை, பொதுமக்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.