உத்தரகாண்ட் மாநிலம், ஹால்ட்வானி மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயது இளைஞர் சோம்பீர். இவர் ஹௌலபார் என்ற கிராமத்தில் வேளாண்மை செய்துவந்தார். இந்நிலையில் இவரது செல்போன் காணாமல்போனதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சோம்பீர் விஷம் குடித்துள்ளார்.
இதையறிந்த சுற்றத்தார் அவரை மீட்டு, ஹால்ட்வானியில் உள்ள சுசிலா அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிகிச்சைப் பலனின்றி சோம்பீர் உயிரிழந்துள்ளார்.