தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உடை மாற்றி கொண்டிருந்த போது இளம்பெண் கொலை - மர்ம நபர்

கேரளாவில் உடை மாற்றிக் கொண்டிருந்த இளம்பெண்ணை முகமூடி அணிந்த நபர் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடை மாற்றி கொண்டிருந்த இளம்பெண் கொலை
உடை மாற்றி கொண்டிருந்த இளம்பெண் கொலை

By

Published : Oct 23, 2022, 9:05 AM IST

கேரள மாநிலத்தின் கண்ணூர் அருகே உள்ள பானூரைச் சேர்ந்தவர், விஷ்ணுபிரியா (23). இவர் நேற்று (அக். 22) தனது அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்தார். அப்போது உள்ளே வந்த முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர், விஷ்ணுபிரியாவின் கை மற்றும் கழுத்தில் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விஷ்ணுபிரியாவின் உடலை மீட்டனர். தொடர்ந்து இச்சம்பவம் தொடர்பாக கூத்துபரம்பரை பகுதியைச் சேர்ந்த ஷ்யாம்ஜித் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்த காவல்துறையினர், அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேநேரம் சம்பவ இடத்தின் அருகில் முகமூடி அணிந்த ஒருவர் நின்று கொண்டிருந்ததாக அருகில் உள்ளவர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:காதலிக்க வற்புறுத்தி பெண் தீ வைத்து கொலை..!

ABOUT THE AUTHOR

...view details