ஆந்திரப் பிரதேசம் (விசாகப்பட்டினம்):ஆந்திரப் பிரதேசம் ஆர்டிசி வளாகம், ஸ்வர்ண பாரதி ஸ்டேடியம் சந்திப்பில் கடந்த சனிக்கிழமை இரவு 1 மணியளவில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்று திரண்டு பைக் சாகசத்தில் ஈடுபட்டும், பேரணியாகவும் சென்றனர்.
அப்போது, அவ்வழியாக அரசு பேருந்து ஒன்று சென்றது. பேருந்துக்கு வழிவிடுமாறு ஓட்டுநர் கூறிய நிலையில், ஆத்திரமடைந்த இளைஞர்கள் பேருந்து மீது தாக்குதல் நடத்தினர். மேலும், ஓட்டுநருடன் வாக்குவாதம் செய்து அவரையும் தாக்கினர். இதை அங்கு சுற்றியிருந்த இளைஞர்கள் வீடியோ பதிவு செய்தனர்.