தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பொதுமக்களுக்கு இடையூறு செய்த கஞ்சா ஆசாமிகள்! வெளுத்து வாங்கிய ஐதராபாத் போலீஸ் - பொதுமக்களுக்கு இடையூறு செய்த கஞ்சா ஆசாமிகள்

தெலங்கானா மாநிலம் ஐதராபாத், மெஹ்திப்பட்டினத்தில் இரவு நேரத்தில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய கஞ்சா ஆசாமிகளை போலீசார் வெளுத்து வாங்கினர்.

hyderabad police
ஐதாராபாத் போலீஸ்

By

Published : Jun 15, 2022, 11:15 AM IST

ஹைதராபாத்:மெஹ்திப்பட்டினத்தில் சில இளைஞர்கள் கஞ்சா போதையில் , அவ்வழியே சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து சென்ற போலீசார் இளைஞர்களை பிடிக்க முயன்ற போது , போலீசாரின் வாகனங்கள் மீதும் ஏறி அட்டகாசம் செய்தனர். மேலும் கஞ்சா போதையில் இருந்ததால் கட்டுப்படாமல் தொல்லை கொடுத்துள்ளனர்.

வெளுத்து வாங்கிய ஐதராபாத் போலீஸ்

இதனால் கோபமடைந்த போலீசார் இளைஞர்களை தங்கள் பாணியில் கவனித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details