தமிழ்நாடு

tamil nadu

கடின உழைப்பின் பலன் - ஹாக்கி அணியை வாழ்த்திய பிரதமர்

By

Published : Aug 5, 2021, 7:06 PM IST

Updated : Aug 5, 2021, 8:19 PM IST

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி கேப்டன் மந்திப் சிங்கை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஹாக்கி அணி
ஹாக்கி அணி

டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக்கில் இன்று (ஆக.5) நடைபெற்ற ஹாக்கி போட்டியில் இந்திய ஆண்கள் அணி ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றியது.

இதன்மூலம் இந்திய அணி 41 ஆண்டுகளுக்குப் பிறகு தனது பதக்க கனவை நனவாக்கியுள்ளது. இந்திய ஹாக்கி அணிக்கு அரசியல் தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி ஹாக்கி அணி கேப்டன் மந்திப் சிங், பயிற்சியாளர் கிரஹம் ரீடை போனில் தொடர்பு கொண்டு வாழ்த்தியுள்ளார்.

அப்போது "உங்களுக்கும், ஒட்டு மொத்த ஹாக்கி அணிக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றியின் மூலம் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்கள் கடின உழைப்பிற்கு பலன் கிடைத்துள்ளது" என்று பாராட்டினார். பயிற்சியாளர் கிரஹம் ரீட்டிற்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்தியர்களின் நினைவில் இந்த வரலாறு பொறிக்கப்படும் - இந்திய ஹாக்கி அணிக்கு பிரதமர் வாழ்த்து

Last Updated : Aug 5, 2021, 8:19 PM IST

ABOUT THE AUTHOR

...view details