தெலங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டம் டிஜெடா கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (22). இவர் அப்பகுதியிலுள்ள வனத்திற்கு அருகே கால்நடைகளை மேய்ப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது புதரில் பதுங்கி இருந்த புலி அவரை தாக்கி காட்டிற்குள் இழுத்து ஓடியது. அப்போது, விக்னேஷின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் வந்தனர். இதையடுத்து, உடலை அங்கேயே விட்டுவிட்டு புலி காட்டுக்குள் ஓடியது.
கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற இளைஞரை தாக்கிய புலி! - Youngster dies as tiger attacks
ஹைதராபாத்: கால்நடை மேய்ச்சலுக்குச் சென்ற இளைஞரை புலி தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Young man died in Tiger attack
விக்னேஷூடன் கால்நடைகளை மேய்ப்பதற்குச் சென்ற கிராமவாசிகள், புலி தாக்கியதை கண்டு பயந்து ஓடினர். ஆனால், புலி தாக்கியதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவலறிந்த சென்ற வனத் துறையினர் விக்னேஷ் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வனத்துறை அலுவலர்கள் புலி தாக்கிய பகுதி மற்றும் தடமறிதல் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். இச்சம்பவம் மக்களிடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.