புனே: மகாராஷ்டிராவில் உடன் பிறந்த தங்கையை, அக்கா பாலியல் துன்புறுத்தலுக்குள்ளாக்கிய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 24 வயது அக்கா, திருமணமாகியும் தன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த 18 வயது தங்கையை, அக்கா பாலியல் ரீதியிலான தொல்லைகளுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படுகிறது.
பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அக்கா மீது தங்கை போலீசில் புகார்! - மகராஷ்டிரா
மகாராஷ்டிராவில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அக்கா மீது தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அக்கா மீது தங்கை போலீசில் புகார்! பாலியல் தொல்லை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-17598857-thumbnail-3x2-moles.jpg)
பாலியல் தொல்லை
இதில் மிரண்டு போன தங்கை, வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருப்பினும் அக்கா, தன் தங்கையை பலவந்தப்படுத்த முயன்றதாக சொல்லப்படுகிறது. இதனால் தங்கை வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தங்கையின் புகாரை கேட்டு குழம்பிப் போன போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:பிபிசியின் மோடி ஆவணப்படம்: தடையை மீறி சென்னை பல்கலை. வளாகத்தில் பார்த்த மாணவர்கள்!