பெங்களூரு(கர்நாடகா): பெங்களூரு மாநகர காவல் துறை, காதலியை கொன்றுவிட்டு தப்பிய இளைஞரைப் பிடிக்க லுக் அவுட் நோட்டீஸை வெளியிட்டு, அவரைப் பிடிக்க முயன்று வருகிறது. டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட ஆர்பிட் கரி அவரை காதலித்துவந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 23 வயது இளம்பெண்ணான அகன்க்ஷா என்பவரை கொன்றுவிட்டு, தப்பியுள்ளார். இதனால், பெங்களூரு மாநகரின் ஜீவன் பீமா நகர் காவல் துறையினர், குற்றவாளியான ஆர்பிட் கரி வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக் அவுட் நோட்டீஸை அனுப்பியுள்ளனர்.
நடந்தது என்ன?: ஹைதராபாத்தைப் பூர்வீகமாகக் கொண்ட அகன்க்ஷா மற்றும் டெல்லியைச் சார்ந்த ஆர்பிட் இருவரும் பெங்களூருவில் இருக்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். இருவரும், இணைந்து ஜீவன் பீம நகரில் உள்ள கொதிஹல்லி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி வந்தனர்.
கடந்த ஜூன் 5ஆம் தேதி, ஆர்பிட் அகன்க்ஷாவிடம் வந்து, தன் மீது காட்டும் மிதமிஞ்சிய அன்புத்தொல்லை குறித்து சண்டையிட்டார். ஒருகட்டத்தில், ஆர்பிட் அகன்க்ஷாவின் கழுத்தை நெரித்து, அவரது இறப்புக் காரணமானார். பின்னர், அகன்க்ஷாவின் உடலை தூக்கில் தொங்கி உயிரிழந்ததுபோல், சித்தரித்தார். பின்னர், எதுவும் நடக்காததுபோல் அந்த அறையில் தப்பியுள்ளார். ஆனால், தவறுதலாக, ஆர்பிட் தனது செல்போனை, தனது காதலி இருந்த அறையில் வைத்துச் சென்றார். இதனால், காவல்துறையினர் அந்த செல்போனை அடிப்படையாகக் கொண்டு, தேடி வருகின்றனர்.