புதுச்சேரி:சென்னையில் நடந்து வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியை வரவேற்கும் விதவிதமாக புதுச்சேரியைச் சேர்ந்த பட்டதாரி பெண் ஒருவர் செயற்கை நகங்களில் செஸ் போர்டு காயின்கள் உள்ளிட்டப் படங்களை வரைந்து அசத்தி வருகிறார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை பல்வேறு தரப்பினரும் பல்வேறு முறையில் வரவேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் புதுச்சேரியில் அரவிந்தர் வீதியில் நகை அலங்காரம் செய்து வரும் நந்தினி என்ற பட்டதாரி பெண் மாறுபட்ட முயற்சியை மேற்கொண்டுள்ளார்.