தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வரதட்சணை கொடுமை- கேரளாவில் இளம்பெண் தற்கொலை - kerala crime news

கேரளா: வரதட்சணை கொடுமை காரணமாக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுனிஷா
சுனிஷா

By

Published : Sep 2, 2021, 9:51 AM IST

Updated : Sep 2, 2021, 10:12 AM IST

கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுனிஷாவுக்கும், பையனூரை சேர்ந்த விஜீஷுக்கும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சுனிஷா சமீபத்தில் தனது கணவர் வீட்டில் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்தார்.

இதனையடுத்து அப்பெண்ணின் உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில் அப்பெண்ணின் கணவர், அவரது குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவந்துள்ளது.

இதுதவிர சுனிஷா தற்கொலை செய்துகொள்ளும் முன்பு தனது சகோதருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "என்னை உங்களால் முடிந்தால் இங்கிருந்து தயவு செய்து இப்போதே அழைத்துச் சென்றுவிடுங்கள். நான் உங்களுடன் வருவதற்கு தயாராக இருக்கிறேன்.

என் கணவரும், அவரின் தாயாரும் திருமணமான அடுத்த நாளிலிருந்து என்னை அடித்து துன்புறுத்துகின்றனர். நான் இன்றிரவு உயிரோடு இருப்பேனா என்பதுகூட தெரியவில்லை" என பேசியுள்ளார். இதன் அடிப்படையில் தற்போது காவல் துறையினர் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக சுனிஷாவின் தாய் பையனூர் காவல் நிலையத்தில், இந்த சம்பவம் குறித்து புகார் அளித்திருந்தார். ஆனால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்யாமல், இருவர்களின் குடும்பத்தையும் அழைத்து சமாதானம் செய்து அனுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : Sep 2, 2021, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details