பிகார் மாநிலத்தின் ஜே.டி.யு. தலைமையிலான அரசின் பதவிக்காலம் நவம்பர் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் மத்தியிலும் அம்மாநிலத்தின் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட தேர்தல் நவம்பர் 7ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இம்முறை நடைபெற்றுவரும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜே.டி.யு.வின் தலைமையில் பாஜகவின் என்.டி.ஏ. கூட்டணி களம் காண்கிறது.
இதன் காரணமாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜகவின் மூத்த தலைவர்கள் பிகாரில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேற்று கதிஹார் சட்டப்பேரவைத் தொகுதியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், "நாட்டின் பாதுக்காப்பிற்கு கேடாக விளங்கிய ஊடுருவல் பிரச்னைகளுக்கு சிஏஏ (குடியுரிமை திருத்தச் சட்டம்), என்ஆர்சி வடிவத்தில் பிரதமர் மோடி தீர்வை அளித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தீங்கு விளைவிக்கும் ஊடுருவல்காரர்களை விரைந்து முற்றுமுழுதாக வெளியேற்றப்படுவார்கள்" என்றார்.