தார்வாட்(கர்நாடகா): 26-வது தேசிய இளைஞர் விழாவின் ஒரு பகுதியாக யோகாத்தான் நடத்த முடிவு செய்து, மாநிலம் முழுவதும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யோகாதானில் பங்கேற்க மாநிலத்தைச் சேர்ந்த 14 லட்சம் யோகிகளும்,யோகா ஆர்வலர்களும் தங்கள் பெயர்களைப் பதிவு செய்திருந்தனர் என கர்நாடக அமைச்சர் கே.சி.நாராயண கவுடா தெரிவித்தார்.
எந்ததெந்த இடத்தில் எத்தனை பேர்?: ’தார்வாட் வேளாண் பல்கலைக்கழக மைதானத்தில் 5904 பேர், கர்நாடக பல்கலைக்கழக மைதானத்தில் 3405 பேர், ஆர்என் ஷெட்டி மாவட்ட மைதானத்தில் 4769 பேர், வித்யாகிரி ஜேஎஸ்எஸ் கல்லூரி மைதானத்தில் 3769 பேர், ஹூப்ளி ரயில்வே கிரிக்கெட் மைதானத்தில் 6076 பேர் என மொத்தம் 5 இடங்களில் 23,923 பேர் என தார்வாட் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் அனைவரும் யோகா செய்தனர்.
பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பிவிவிஎஸ் கல்லூரி மைதானத்தில் 16,632 பேரும், பெல்காமில் உள்ள ராணுவ கோல்ஃப் மைதானத்தில் 41,914 பேரும், சுவர்ணா சவுதாவுக்கு முன்புறம் 17,712 பேரும், பல்லாரி விமான நிலைய மைதானத்தில் 11,847 பேரும், பெங்களூரு, செயின்ட் கல்லூரியில் 4798 பேரும், காந்திரவா பல்கலைக்கழகத்தில் உள்ள ஸ்டேடியத்தில் 8,446 பேரும், சாமராஜநகர் மாவட்ட மைதானத்தில் 6,843 பேரும், சிக்கபள்ளாப்பூர் எஸ்ஜேசிஐடி கல்லூரி மைதானத்தில் 9256 பேரும் யோகாசனம் செய்தனர்.
சித்ரதுர்கா மாவட்ட ஸ்டேடியத்தில் 8,675 பேரும், தட்சிண கன்னடா மாவட்டத்தில் உள்ள மூட்பித்யா ஆல்வாஸ் கல்லூரி மைதானத்தில் 31,986 பேரும், தாவாங்கேரே மாவட்ட ஸ்டேடியத்தில் 11,808 பேரும், கடக் ஏஎஸ்எஸ் கலைக்கல்லூரி மைதானத்தில் 7842 பேரும், ஹாவேரி மாவட்டக் கல்லூரி மைதானத்தில் 6,544 பேரும், கலா போலீஸ் மைதானத்தில் 16,064 பேரும், கோலார் ஸ்ரீஎம்வி ஸ்டேடியத்தில் 16,451 பேரும், கொப்பல் மாவட்ட ஸ்டேடியத்தில் 9781 பேரும், மாண்டியா பிஇஎஸ் கிரிக்கெட் மைதானத்தில் 8,892 பேரும் யோகாசனம் செய்தனர்.