மைசூரு(கர்நாடகா):மைசூருவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று (ஜூன் 21) கலந்து கொண்டார். அப்பேது பொதுமக்களுடன் இணைந்து மோடியும் யோகா செய்தார்.இதில் பேசிய மோடி, "இந்த 8வது சர்வதேச யோகா தினத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று உலகின் அனைத்து பகுதிகளிலும் யோகா செய்யப்படுகிறது. யோகா நமக்கு அமைதியைத் தருகிறது. .யோகா சமுதாயத்திற்கு அமைதியை கொண்டு வரும்.
யோகாவிலிருந்து வரும் அமைதி தனிநபர்களுக்கு மட்டுமல்ல, நமது நாட்டிற்கும் உலகிற்கும் அமைதியைக் கொண்டு வருகிறது." யோகா என்பது எந்த ஒரு தனி மனிதனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் பொருந்தும் என்றார். அதனால்தான் இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'யோகா மனிதகுலத்திற்கானது’ என்பதாகும் என பிரதமர் மோடி கூறினார்.
இந்த ஆண்டு கொண்டாட்டத்தின் கருப்பொருளான "மனிதகுலத்திற்கான யோகா" என்ற தீம் பல ஆலோசனைகளுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டது. இது கரோனாவின் உச்சக்கட்டத்தின் போது ஏற்பட்ட மன அழுத்தத்தை தணிப்பதில் யோகா எவ்வாறு உதவியது என்பது குறித்தும், மற்றும் கரோனாவிற்கு பிந்தைய காலகட்டத்தில் எவ்வாறு பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது என்பதை சரியான முறையில் செயல்படுத்தியது. இரக்கம், ஒற்றுமை உணர்வை வளர்ப்பது மற்றும் உலகெங்கிலும் உள்ள மக்களிடையே உருவாக்குவதன் மூலம் மக்களை ஒன்றிணைக்க யோகா உதவும்.