தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆரம்ப சுகாதார நிலைய வாசலில் பிரசவித்த கர்ப்பிணி... சிசு மரணம்...மருத்துவர்கள் இல்லாததால் நேர்ந்த அவலம்... - மகாராஷ்ட்ராவில் கர்ப்பிணிக்கு நேர்ந்த கொடுமை

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தில் பிரசவத்திற்காக வந்த கர்ப்பிணிக்கு வராண்டாவில் குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் குழந்தை இறந்துவிட்டது.

yavatmal
yavatmal

By

Published : Aug 20, 2022, 9:58 PM IST

உமர்கெட்: மகாராஷ்ட்ராவில், சுபாங்கி ஹஃப்சே என்ற கர்ப்பிணி , பிரசவத்திற்காக தனது தாயின் ஊரான விதுலுக்கு வந்திருந்தார். அங்கு அவருக்கு பிரவச வலி ஏற்பட்டதையடுத்து, அவரது தந்தை ஆம்புலன்சை அழைத்தார்.

ஆனால் இரண்டு மணி நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால், கர்ப்பிணியை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, யாவத்மால் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றனர். அங்கு மருத்துவரோ, சுகாதார ஊழியர்களோ இல்லாததால், கர்ப்பிணி நுழைவு வாயில் அருகே உள்ள வராண்டாவில் வலியுடன் காத்திருந்தார்.

நீண்ட நேரமாக மருத்துவர்கள் வராததால், அவருக்கு வராண்டாவிலேயே பிரசவமானது. முறையான மருத்துவ சிகிச்சை இல்லாமல் பிறந்ததால், சில நிமிடங்களிலேயே பிறந்த குழந்தை இறந்துவிட்டது.

இதையும் படிங்க:இறந்த குழந்தை உயிருடன் வரும்... கடவுள் கனவில் கூறியதாக பெண் செய்யும் விநோத பூஜை

ABOUT THE AUTHOR

...view details