கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநரின் நடவடிக்கை குறித்து சுட்டிக்காடி மோடி, அமித்ஷா ஆகியோரை முன்னாள் நிதியமைச்சர் யஷ்வந்த் சின்ஹா விமர்சித்துள்ளார்.
மோடி, அமித்ஷா கொடுத்த ஸ்கிரிப்ட்படி ஆளுநர் நடிக்கிறார் - யஷ்வந்த் சின்ஹா - Yashwant Sinha - West Bengal governor is acting according to a script provided to him by Modi/Shah
அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையும் இல்லை. இவர்கள் மம்தாவை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மோடி, அமித்ஷா கொடுத்த ஸ்கிரிப்ட்படி மேற்கு வங்க ஆளுநர் நடிக்கிறார். அவர்கள் தேர்தலில் மோசமாக தோல்வியடைந்ததை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அவர்களுக்கு இந்திய அரசியலமைப்பின் மீது நம்பிக்கையும் இல்லை. இவர்கள் மம்தாவை அமைதியாக இருக்கவிடமாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நிகழ்ந்த வன்முறையை சுட்டிக்காட்டி, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பாஜக முயற்சிப்பதாகவும், இதற்கு ஆளுநர் ஒத்திசைப்பதாகவும் திருணாமுல் காங்கிரஸ் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
TAGGED:
யஷ்வந்த் சின்ஹா