டெல்லி:குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் ஜூலை 18ம் தேதி நடைபெறும் நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் யஷ்வந்த் சின்ஹா இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்! - குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
குடியரசு தலைவர் தேர்தலில் போட்டியிட எதிர்க்கட்சிகளின் சார்பாக அறிவிக்கப்பட்ட யஷ்வந்த சின்ஹா இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
யஷ்வந்த் சின்ஹா வேட்புமனு தாக்கல்
யஷ்வந்த சின்ஹா வேட்பு மனு தாக்கல் செய்த போது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி , தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் , தேசிய மாநாடு கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா , சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் , திமுக சார்பில் எம்பி ராசா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.