பெங்களூரு:ஆசியாவின் மிகப்பெரிய விமான கண்காட்சியான "ஏரோ இந்தியா 2023" 14ஆவது பதிப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.13) கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தொடங்கி வைத்தார். இதற்கு முன்னதாக அவரை கன்னட திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களான கேசிஎஃப் நடிகர் யஷ், காந்தாரா நடிகரும் இயக்குனருமான ரிஷப் ஷெட்டி, ஹோம்பேல் பிலிம்ஸ் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர், மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் மனைவி அஷ்வினி உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இந்த சந்திப்பு பெங்களூருவில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்றது. இதுகுறித்து ஹோம்பேல் பிலிம்ஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "புதிய இந்தியா மற்றும் முற்போக்கு கர்நாடக மாநிலத்தை வடிவமைப்பதில் பொழுதுபோக்குத் துறையின் பங்கைப் பற்றி பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினோம். அதற்காக பெருமைப்படுகிறோம்" எனப் பதிவிடப்பட்டுள்ளது.