புதுச்சேரி:எழுத்தாளர் கி. ராஜநாராயணனின் உடலுக்கு முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார்.
எழுத்தாளர் கி. ராஜநாராயணன் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி அஞ்சலி முன்னதாக புதுச்சேரி அரசு சார்பில், அவரது உடலுக்கு காவல் துறை மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டி இடைசெவல் கிராமத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. இரவு 8 மணிக்கு அவரது உடல் அங்கு செல்லும் எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: புதிய குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு