தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மல்யுத்த வீரரைச் சுற்றிவளைத்தத் தனிப்படை... சுஷில் குமார் கைது! - Olympic Wrestler Sushil Kumar

டெல்லி: சக வீரரைக் கொலை செய்த வழக்கில் தலைமறைவாக இருந்த சுஷில் குமாரை, தனிப்படை காவல் துறையினர் கைது செய்தனர்.

Sushil Kumar
சுஷில் குமார்

By

Published : May 23, 2021, 11:08 AM IST

மல்யுத்த வீரர் சாகர் ராணா தன்கட்டுக்கும், சுஷில் குமாருக்கும் இரண்டு வாரங்களுக்கு முன்பு டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் சுஷில் குமாரும் அவரின் நண்பர்களும் தன்கட்டை கடுமையாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினர்.

படுகாயங்களுடன் கிடந்த சாகர் ராணா தன்கட்டை மற்றொரு நண்பர் சோனு மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சுஷில் குமாரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தனர். அவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும், அவர் குறித்து தகவல் அளிப்போருக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் எனவும் காவல் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. சுஷில் குமாரை காவல் துறையினர் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று (மே.23) டெல்லி காவல் துறையின் தனிப்படை அவரை அதிரடியாகக் கைது செய்தனர்

37 வயதாகும் சுஷில் குமார், இந்தியாவுக்காக கடந்த 2008 இல் வெண்கலமும், 2012 ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கமும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details