பாட்னா:பீகாரில் மல்யுத்தபோட்டியின்போது வீரர் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். லக்கிஷராய் நகரில் பசந்த் பஞ்சமியை முன்னிட்டு, மல்யுத்தபோட்டி நடைபெற்றது. இதில் ஒரு போட்டியில் மல்யுத்த வீரர் தாக்கியதில் எதிரணி வீரர் களத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
உயிரிழந்த வீரர் பாட்னாவை சேர்ந்த சிவம் குமார் என அடையாளம் காணப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சிவம் குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஹுசைனா மாவட்டத்தைச் சேர்ந்த ஜெனு யாதவ், மற்றும் பாட்னாவை சேர்ந்த மொகமா களத்தில் விளையாட இருந்ததாகவும், இதில் மொகமாவுக்கு பதிலாக சிவம் குமார் கட்டாயத்தின் பேரில் களமிறக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.