கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரை காங்கிரஸ் கட்சியின் ஆதரவோடு குமாரசாமி முதலமைச்சராக பதவி வகித்தார். ஆனால், ஆளும் கூட்டணியை சேர்ந்த 20 சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தனர். பின்னர், பாஜகவை சேர்ந்த எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்று கொண்டார்.
பாஜகவுடன் நெருக்கமாக இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன் - முன்னாள் முதலமைச்சர் - மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர்
பெங்களூரு: பாஜகவுடன் நெருக்கமாக இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன் என தெரிவித்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்ததன் காரணமாகவே தோல்வியடைந்ததாக குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜகவுடன் நெருக்கமாக இருந்திருந்தால் முதலமைச்சராக இருந்திருப்பேன் என மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும் கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "2006 முதல் 2007 வரை, நான் முதலமைச்சராக இருந்தபோது நல்ல பெயரை எடுத்தேன். ஆனால், காங்கிரஸ் கட்சியின் கூட்டணி வைத்த காரணத்தால் அனைத்தும் கெட்டுவிட்டது.
பாஜகவிடம் அதிகாரத்தை அளிக்கவில்லை என்றபோதிலும், என் மீது மக்கள் வைத்த நன்மதிப்பு தொடரவே செய்தது. தேவ கவுடாவின் அறிவுரையின் பேரில், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தோம். மதச்சார்பற்ற கொள்கையை அவர் பின்பற்றுவதால், அவரை எதிர்த்து நான் பேசவில்லை. இந்த வயதில் அவரின் உணர்வை புண்படுத்த விரும்பவில்லை. எனவேதான், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்தோம். 2018ஆம் ஆண்டு, எங்கள் மனதை காங்கிரஸ் புண்படுத்தியதுபோல் 2008ஆம் ஆண்டு பாஜக புண்படுத்தவில்லை" என்றார்.