தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விவசாய போராட்டத்தைவிட இவங்களுக்குதான் அதிக முக்கியத்துவம் தரணும் - மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் - விவசாயிகள் போராட்டம்

மும்பை: டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்தை காட்டிலும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்திற்குதான் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

By

Published : Dec 14, 2020, 4:39 PM IST

புதிதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த போராட்டத்திற்கு சிவசேனா கட்சி ஆதரவு தெரிவித்தது. இதனை கண்டித்துள்ள மகாராஷ்டிரா மாநில முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், டெல்லியில் நடைபெறும் விவசாய போராட்டத்தை காட்டிலும் மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்திற்குத்தான் அரசு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், "மராத்தா போராட்டக்காரர்களின் வீட்டிலேயே அவர்கள் தாக்கப்பட்டனர். ஆனால், டெல்லியில் போராடும் விவசாயிகளின் உரிமைகள் குறித்து மகாராஷ்டிரா அரசு பேசிவருகிறது. டெல்லியில் நடைபெறும் போராட்டம் குறித்து கருத்து தெரிவிப்பதற்கு முன்பு மகாராஷ்டிரா பிரச்னைகள் குறித்து முதலமைச்சர் பேச வேண்டும். சட்டப்பேரவையில் இதுகுறித்து பேச மாநில அரசு அஞ்சுகிறது” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details