லாஹவுல் (இமாச்சலப் பிரதேசம்): உலகின் மிக உயரமான தபால் நிலையம் ஹிக்கிம் கிராமம் அருகே ஸ்பிதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இந்த தபால் நிலையம் சுமார் 14,567 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அஞ்சல் துறை புதிய முயற்சியை மேற்கொண்டது.
அந்த வகையில் பழைய தபால் நிலையத்தை சீரமைத்து தபால் பெட்டி வடிவில் புதிதாக மாற்றியமைத்துள்ளது. இந்த புதிய தபால் நிலையத்தில் அஞ்சல் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த தபால் நிலையம் முன் சுற்றுலாப் பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.