தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இந்தியாவுக்கு ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை அனுப்பி வைத்தது இங்கிலாந்து! - 124 நேற்று வடக்கு அயர்லாந்தில்

உலகின் மிகப்பெரிய சரக்கு விமானமான அன்டோனோவ் 124, நேற்று (மே7) வடக்கு அயர்லாந்தில் பெல்பாஸ்டிலிருந்து ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை ஏற்றிக் கொண்டு இந்தியாவிற்கு புறப்பட்டது.

By

Published : May 9, 2021, 6:47 AM IST

லண்டன்: இந்தியாவில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால், தொற்று பாதித்தநோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறன. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு வருகிறது.

இந்தநிலையில், இங்கிலாந்திலிருந்து உலகின் மிகப்பெரிய சரக்கு விமானம் வடக்கு அயர்லாந்தில் பெல்பாஸ்டில் இருந்து நேற்று (மே 7) 18 டன் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் மற்றும் 1,000 வென்டிலேட்டர்களை ஏற்றிக் கொண்டு இந்தியா புறப்பட்டது. இந்தத் தகவலை பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது.

இந்த விமானம் இன்று காலை 8 மணிக்கு டெல்லியில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மிக பெரிய அன்டோனோவ் 124 விமானத்தில் உயிர் காக்கும் கருவிகளை ஏற்றுவதற்கு, விமான நிலைய ஊழியர்கள் இரவு முழுவதும் பணியாற்றினர்.

இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மூன்று ஆக்சிஜன் உற்பத்தி அலகுகள் ஒவ்வொன்றும் 40 அடி கொள்கலன் அளவு உள்ளவை. இதன் மூலம் நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜனை உற்பத்தி செய்ய முடியும். ஒருமணி நேரத்தில் 50 பேர் பயன்படுத்தும் திறன் கொண்டது.

கடந்த மாதம் இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட 200 வென்டிலேட்டர்கள் மற்றும் 495 ஆக்ஸிஜன் செறிவூட்டல்கள் அனுப்பப்பட்டன. இதற்கு எஃப்.சி.டி.ஓ நிதியுதவி அளித்தது. இந்த உதவித் தொகுப்பு சுகாதார மற்றும் சமூக பாதுகாப்புத் துறையால் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, இங்கிலாந்து சுகாதரா செயளாலர் மாட் ஹான்காக் கூறுகையில் ’’ உலகம் முழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வென்டிலேட்டர்கள், ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் உட்பட, நாங்கள் வழங்கும் முக்கிய உபகரணங்கள் உயிர்களைக் காப்பாற்றவும், இந்தியாவின் சுகாதார அமைப்பை ஆதரிக்கவும் உதவும். தற்போது, இந்தியாவின் நிலைமை இதயத்தை நொறுக்கும் நிலையில் உள்ளது. இந்த மகத்தான சவாலை எதிர்கொள்கையில் நாங்கள் எங்கள் நண்பர்களுடன் பக்கபலமாக நிற்கிறோம்.

வடக்கு அயர்லாந்து சுகாதார மந்திரி ராபின் ஸ்வான் பெல்ஃபாஸ்ட் சர்வதேச விமான நிலையத்தில் தனது துறையால் வழங்கப்பட்ட உபரி ஆக்சிஜன் ஜெனரேட்டர்களை மாபெரும் சரக்கு விமானத்தில் ஏற்றுவதைக் காண இருந்தார்

எங்களால் முடிந்த வரை உதவுகிறோம், ஆதரவு அளித்து வருகிறோம். இந்த உபகரணங்கள் தற்போது இந்தியா அனுபவிக்கும் அழுத்தத்தையும் வலியையும் குறைக்க வழி செய்யும் “எனக் கூறினார்.

இதையும் படிங்க: முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் அசுரன்

ABOUT THE AUTHOR

...view details