தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இரக்கமில்லா கரோனா- பட்டினி அதிகரிப்பு! - UN report on food security

கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் உலகில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

World hunger at a 15-year high due to Covid: United Nations
World hunger at a 15-year high due to Covid: United Nations

By

Published : Jul 14, 2021, 2:06 PM IST

ஹைதராபாத் : உலகில் 801 கோடி மக்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் பசியால் வாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோவிட்-19 பரவல் காரணமாக கடந்த ஆண்டு சுமார் 811 மில்லியன் (801 கோடியே 10 லட்சம்) மக்கள் ஊட்டச்சத்து குறைபாடுக்குள்ளானதாக ஐக்கிய நாடுகள் சபை திங்கள்கிழமை (ஜூலை 12) தெரிவித்தது.

பசி- ஊட்டச்சத்து குறைபாடு

ஐ.நா. “உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை 2021” என்ற அறிக்கையை வெளியிட்டது. அதில், “2020 ஆம் ஆண்டிலிருந்து உலகில் பசி அதிகரித்து வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு நிலவுகிறது.

பசி கொடுமை எதிரொலி - தனது உடம்பை தானே விழுங்கிய ராஜநாகம்

உலகளவில், கரோனா வைரஸ் தொற்று பொருளாதார நடவடிக்கைகளில் கடுமையான சரிவுக்கு வழிவகுத்தது, இதன் மூலம் உணவுக்கான அணுகலை பாதித்துள்ளது.

வளரும் நாடுகள் பாதிப்பு

இதனால் பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதற்கு, மோதல், உயர் சமத்துவமின்மை, காலநிலை மாற்றம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு காரணமாக உள்ளன.

ஊட்டச்சத்து குறைபாடு - ஐக்கிய நாடுகள் அறிக்கை

உணவு விலையில் பணவீக்கம் 10 ஆண்டுகளில் மிக உயர்ந்ததாக உள்ளது, அதிலும் பெரும்பாலும் இறக்குமதியைச் சார்ந்திருக்கும் வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிலமை சாதகமாக இல்லை.

ஆப்பிரிக்க- ஆசிய நாடுகள்

2030ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதிசெய்ய ஐ.நா உலகிற்கு ஒரு தெளிவான அழைப்பை வழங்கியுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு (PoU) பரவலானது 8.4 முதல் 9.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

பசிக் கொடுமை

ஆப்பிரிக்காவில் வசிப்பவர்களில் 21 சதவீதம், ஆசியாவில் 9 சதவீதம், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளில் 9.1 சதவீதம் பேர் பசியை எதிர்கொள்கின்றனர்.

ஊட்டச்சத்து குறைபாடு

உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆசியாவிலும் (418 மில்லியன்), ஆப்பிரிக்காவில் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேற்பட்டவர்களாகவும் (282 மில்லியன்) காணப்படுகிறார்கள்.

இளசுகளே உஷார்- கோவிட் 3ஆம் அலை!

2019 ஆம் ஆண்டின் நிலைமையுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்காவில் கூடுதலாக 46 மில்லியன் மக்களும், ஆசியாவில் 57 மில்லியனும், லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் 14 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனிதாபிமானம்

பசி நெருக்கடியைத் தீர்க்க, மோதல் உள்ள பகுதிகளில் மனிதாபிமான, அபிவிருத்தி மற்றும் சமாதானக் கொள்கைகளை ஒருங்கிணைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

'எங்களுக்கு திருவிழாவ விட மக்களின் பசி தீர்ப்பதுதான் முக்கியம்' - கோயில் நிதியை நிவாரண நிதியாக்கிய கிராம மக்கள்!

உணவு முறைகள் முழுவதும் காலநிலை பின்னடைவைக் கட்டமைக்கவும், நிதி ஆதரவை வெளியிடுவதன் மூலம் தொற்றுநோயைக் குறைக்கவும் அல்லது உணவு விலை ஏற்ற இறக்கத்தை குறைக்கவும், செலவு உறுதி செய்யவும் ஐ.நா கொள்கை வகுப்பாளர்களை வலியுறுத்தியுள்ளது.

அறிக்கை

விநியோக சங்கிலிகளை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலமும், தொழில்நுட்ப இடமாற்றங்கள் மற்றும் பல்வேறு திட்டங்களைப் பயன்படுத்தி ஏழை சமூகத்தினரிடையே உணவு மதிப்பு சங்கிலிகளை அதிகரிப்பதன் மூலமும் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவு குறைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டினி சாவை தடுக்கும் முயற்சியில் அன்னப் பூரணிகள்

இந்த அறிக்கையை ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO), வேளாண் மேம்பாட்டுக்கான சர்வதேச நிதி (IFAD), ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் (யுனிசெஃப்), ஐ.நா. உலக உணவு திட்டம் (WFP) மற்றும் உலக சுகாதார அமைப்பு இணைந்து வெளியிட்டுள்ளன.

இதையும் படிங்க : பசித்தால் எடுத்துக்கொள்ளுங்கள்: ஆதரவற்றவர்களுக்கு உணவளிக்கும் தொண்டு நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details