ஐக்கிய நாடுகள் சபையின் கீழ் செயல்படும், ஐ.நா. நிலையான அபிவிருத்தி தீர்வுகள் நெட்வொர்க், உலகில் எந்த நாட்டில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள் என்பதைக் கணக்கிட ஒரு ஆய்வை மேற்கொண்டது. இதற்காக 149 நாடுகளை மாதிரிகளாகத் தேர்ந்தெடுத்து, இரு காரணிகளை முதன்மையாகக் கொண்டு இந்த மதிப்பீடு செய்தது.
இரு காரணிகள்
- கரோனா நெருக்கடி மக்களின் வாழ்க்கையின் கட்டமைப்பு மற்றும் தரத்தில் ஏற்பட்ட மாற்றம்
- நாட்டின் அரசாங்கம் கரோனா நெருக்கடியை கையாண்ட விதம். இந்த இருகாரணிகளையும் அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ளது. ஐஸ்லாந்து, டென்மார்க், ஸ்விட்சர்லாந்து, நெதர்லாந்து, ஸ்வீடன், ஜெர்மனி, நார்வே ஆகியவை முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.