தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்; பாகிஸ்தான், இலங்கை, சீனாவை விட பின்தங்கிய இந்தியா!

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் அண்டை நாடுகளான சீனா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம் உள்ளிட்ட நாடுகளை விடவும் இந்தியா பின்தங்கி காணப்படுகிறது.

World Happiness Index
World Happiness Index

By

Published : Mar 19, 2022, 4:54 PM IST

ஹைதராபாத் : 2022ஆம் ஆண்டிற்கான உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் (World Happiness Index) இந்தியா 136ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் தொடர்ந்து ஃபின்லாந்து முதலிடத்தை பிடித்துள்ளது. 146ஆவது இடத்தில் உள்ள ஆப்கானிஸ்தான், உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட லெபனான் நாட்டை விட 4 புள்ளிகள் முன்னேறியுள்ளது.

இந்தப் பட்டியலில் சீனா 72ஆவது இடத்திலும், 80ஆவது இடத்தில் ரஷியாவும், 84ஆவது இடத்தில் நேபாளமும், 121ஆவது இடத்தில் பாகிஸ்தானும், 126ஆவது இடத்தில் மியான்மரும், 127ஆவது இடத்தில் இலங்கையும் காணப்படுகின்றன.

2013ஆம் ஆண்டு மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா 111ஆவது இடத்தில் இருந்தது. இந்நிலையில் 2021ஆம் ஆண்டு இந்தியா 139ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. தற்போது 3 இடங்கள் முன்னேறி 136ஆவது இடத்தை பிடித்துள்ளது.

இதையும் படிங்க : தி காஷ்மீர் ஃபைல்ஸ் வெறுப்பை தூண்டுகிறது- ஜெய்ராம் ரமேஷ்!

ABOUT THE AUTHOR

...view details