புதுச்சேரி:உலக கண் அழுத்த நோய் வாரத்தை முன்னிட்டு பொதுமக்களிடம் கண் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுச்சேரி கடற்கரை சாலை, காந்தி திடல் அரவிந்தர் கண் மருத்துவமனை, புதுச்சேரி நகராட்சி ஆகியவை இணைந்து நடத்தும் கண் அழுத்த நோய் (க்ளக்கோமா) விழிப்புணர்வு கண்காட்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (மார்ச் 5) தொடங்கிவைத்தார்.
இக்கண்காட்சியில், பிளாஸ்டிக் பாட்டில்கள், பனை ஓலைகள், பனை ஓலைத் தட்டுகள் உள்ளிட்ட பயன்படுத்தப்பட்ட பொருள்களை கொண்டு கிங்காங் உருவப் படங்கள், தேசிய தலைவர்களான மகாத்மா காந்தி, அப்துல்கலாம் ஓவியங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன. இது சுற்றலா பயணிகளின் கவனத்தை வெகுவாக கவர்ந்து வருகிறது. சுற்றுலா பயணிகள் இந்த ஓவியங்களின் அருகில் நின்று செல்ஃபி எடுத்து கண்காட்சியை பார்த்து செல்கின்றனர்.