தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உலக தாய்ப்பால் வார விழா - தமிழிசை பங்கேற்பு - pondicherry

ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழா நிகழ்ச்சியை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

உலக தாய்ப்பால் வாரவிழா
உலக தாய்ப்பால் வாரவிழா

By

Published : Aug 4, 2021, 3:23 PM IST

புதுச்சேரி:உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 7 ஆம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக புதுச்சேரியில் உள்ள ராஜீவ் காந்தி அரசு பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வார விழா இன்று (ஆக.4) நடைபெற்றது.

தமிழிசை பங்கேற்பு

இவ்விழாவை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பங்கேற்று தொடங்கி வைத்தார். மேலும், தாய்ப்பால் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். பின் மருத்துவமனையைப் பார்வையிட்டு மருத்துவர்களுக்கு ஆலோசனை வழங்கினார்.

நிகழ்ச்சியில் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு படக்காட்சி போடப்பட்டது. விழாவில் சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு, மருத்துவமனை கண்காணிப்பாளர் சுதா, துணை இயக்குநர் ஆனந்த லட்சுமி, குழந்தைகள் நல மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக விழாவில் கலந்துகொண்ட அனைவரும் தாய்ப்பால் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சரைச் சந்தித்து வாழ்த்து பெற்றார் பவானி தேவி!

ABOUT THE AUTHOR

...view details