டெல்லி: இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் விசாகப்பட்டினம் (IIM-Visakhapatnam) நடத்திய நிகழ்ச்சியில் நேற்று (ஜன.30) மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி காணொளி வாயிலாக கலந்து கொண்டார்.
அப்போது, இந்தியாவின் ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதற்கான உள்கட்டமைப்பு வளர்ச்சி குறித்து பேசினார். அதில், "வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 2 லட்சம் கிமீ தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்துவதற்கான பணிகள் மேற்கெள்ளப்பட்டு வருகிறது.
22 பசுமை வழி விரைவுச் சாலைகள் மேம்படுத்தப்படும். சாலைகள் மேம்படுத்துவதன் மூலம் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு வெகுவாக குறையும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும்" என்றார்.
மேலும், உள்நாட்டு பொருட்களின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசின் கதி-சக்தி தேசிய திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது"என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இதையும் படிங்க: குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்