தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 6, 2022, 7:09 PM IST

ETV Bharat / bharat

விபரீதத்தில் முடிந்த விளையாட்டு - உயரழுத்த காற்றுக் குழாயை ஆசனவாயில் செலுத்திய கொடூரம்

விளையாட்டாக உயரழுத்த காற்றுக் குழாய் ஆசனவாயில் செலுத்தப்பட்டதில், இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Worker
Worker

தானே:மகாராஷ்டிரா மாநிலம் தானே அருகே வாடோல் கிராமத்தில் உள்ள தொழிற்சாலையில் பணியாளர் ஒருவர் பணி செய்து கொண்டிருந்தபோது, அவருடன் பணிபுரியும் சக ஊழியர் ஒருவர் விளையாட்டாக உயர் காற்றழுத்தம் கொண்ட குழாயை அவரது ஆசன வாயில் செலுத்திவிட்டார். இதனால், உயர் அழுத்தக் காற்று இளைஞரின் குடல் வரை சென்றுள்ளது.

உடனடியாக அவர் மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். உயர் அழுத்தக் காற்று குடலை சேதப்படுத்திவிட்டதாகவும், அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால், அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனையிலும், தொழிற்சாலையிலும் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் விளையாட்டாக நடந்ததால், சக ஊழியர் மீது புகார் பதிவு செய்ய விரும்பவில்லை என பாதிக்கப்பட்ட இளைஞர் போலீசாரிடம் கூறியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: நிருபராக மாறி பாழடைந்த பள்ளியை தோலுரித்த 6ஆம் வகுப்பு மாணவன் - 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

ABOUT THE AUTHOR

...view details