தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 25, 2020, 12:05 AM IST

ETV Bharat / bharat

#ETVBharatExclusive வாக்கரசியலில் இருந்து வெளியேற போகிறேன் - உமர் அப்துல்லா உறுதி

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மீட்டெடுக்கும் வரை சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடமாட்டோம் என அம்மாநில முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா ஈடிவி பாரத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.

உமர் அப்துல்லா
உமர் அப்துல்லா

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்றும் அதேநேரத்தில் அரசியலிலிருந்து விலக போவதில்லை என்றும் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும் தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். வரலாற்றில் முதன்முதலாக மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி அங்கம் வகிக்கும் குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணி வெற்றிபெற்றுள்ளது.

இந்நிலையில், ஈடிவி பாரத்திற்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், "அரசியலமைப்பு சட்டம் 370ஐ நீக்கி மாநிலத்தை இரண்டாக பிரித்த மத்திய அரசின் முடிவுக்கு எதிராக ஜம்மு காஷ்மீர் மக்கள் வாக்களித்துள்ளனர்" என்றார்.

ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019 அமலான பிறகு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு முதலமைச்சராக விருப்பம் உண்டா என செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, அதுமாதிரியான திட்டம் எதுவும் இல்லை என அவர் பதிலளித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடுவேன்

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "தற்போது வரை, சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடுவதற்கான எண்ணம் இல்லை. இதனை அரசியலமைப்பு சட்டம் 370 நீக்கத்துடன் தொடர்புபடுத்தவில்லை. ஆனால், இம்மாதிரியான துரோகத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை. அரசியலிலிருந்து விலகப் போவதுமில்லை, ஜம்மு காஷ்மீர் மக்களின் உரிமைக்காக தொடர்ந்து போராட போகிறேன். தேசிய மாநாட்டு கட்சியை வலுப்படுத்த போரகிறேன். மாநிலத்தின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பணியாற்ற போகிறேன்.

பாஜக அச்சம் கொண்டுள்ளது

வாக்கரசியலில் இருந்து வெளியேற போகிறேன் - உமர் அப்துல்லா உறுதி

உள்ளாட்சி தேர்தலில் குப்கார் தீர்மானத்திற்கான மக்கள் கூட்டணியின் வெற்றியை கண்டு பாஜக அச்சம் கொண்டுள்ளதால் இப்போதைக்கு அக்கட்சி சட்டப்பேரவை தேர்தலை நடத்தாது. இத்தேர்தலில் பெற்ற வெற்றியால் எங்கள் கூட்டணியும் தேசிய மாநாட்டு கட்சியும் ஊக்கமடைந்துள்ளது. சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு, அப்துல்லாக்களின் கதை சில மாதங்களில் முடிவுக்கு வந்து விடும் என பாஜக தெரிவித்தது.

ஆனால், உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் அவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. பாஜகவுக்கு ஜம்மு காஷ்மீர் மக்கள் பதிலளித்துள்ளனர். இந்த முடிவு எங்களுக்கு ஊக்கம் அளிப்பதோடு நாங்கள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுகிறது" என்றார்.

ABOUT THE AUTHOR

...view details