தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெருந்தொற்று காலத்தில் கடும்உடற்பயிற்சியும் பெண்களின் மனநிலையைப்பாதிக்கும்! - பிங்காம்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பெக்டாச்சே

மன அழுத்தத்தை அனுபவிப்பதாகப்புகாரளிப்பதில் ஆண்களை விட பெண்கள் அதிகமாக உள்ளனர்; இது அவர்களுக்கு மன அழுத்த சகிப்புத்தன்மை குறைவாக இருப்பதைக் காட்டுகிறது.

Etv Bharatஊரடங்கு நேரத்தில் கடும் உடற் பயிற்சியும் பெண்களை பாதிக்கும்...!
Etv Bharatஊரடங்கு நேரத்தில் கடும் உடற் பயிற்சியும் பெண்களை பாதிக்கும்...!

By

Published : Sep 16, 2022, 5:10 PM IST

Updated : Nov 28, 2022, 4:08 PM IST

டெல்லி:நியூயார்க் பல்கலைக்கழகமான பிங்காம்டன் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி கரோனா தொற்றின்போது பெண்களின் மன ஆரோக்கியம் ஆண்களை விட உடல் செயல்பாடு போன்றவைகளால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனத்தெரியவந்துள்ளது.

இந்த ஆய்வில் கரோனா காலம் மூன்று தனித்தனியான கட்டங்களாகப்பிரிக்கப்பட்டது. அவை கரோனாவிற்கு முன், கரோனா தொற்றின்போது மற்றும் அதன்பின் ஆகிய மூன்று கட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டது. கரோனா தொற்றின்போது ஊரடங்கு இருந்ததையும், அதற்கான பிற்பகுதி என்பது கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அமல்படுத்தப்பட்ட காலகட்டத்தையும் குறிக்கிறது.

இந்த தொற்றுநோய்களின்போது, ​​அதிக அளவு மன அழுத்தத்தினை சமாளிக்கவும், அமைதியான மனநலத்தை அடையவும் பெண்களுக்கு மிதமான உடற்பயிற்சி தேவை என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இருப்பினும் அடிக்கடி செய்யக்கூடிய உடற்பயிற்சி ஆண்களுக்கு மட்டுமே நன்மை பயக்கும் எனவும், பிங்காம்டன் பல்கலைக்கழகப் பேராசிரியர் பெக்டாச்சேவின் ஆராய்ச்சியின்படி, பெண்கள் தங்கள் மனதை ஒரு நிலையான நிலையில் வைத்திருக்கவும், அவர்களின் உற்சாகத்தை உயர்வாகவும் வைத்திருக்க விரும்பாத நிலையில், தங்கள் உடற்பயிற்சி முறைகளை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதீத உடற்பயிற்சியின் விளைவால் ஆண்களை விட பெண்கள் மன அழுத்தத்தை அனுபவிக்க அதிக வாய்ப்புள்ளது. இது அவர்களுக்கு குறைந்த மன அழுத்த சகிப்புத்தன்மை இருப்பதைக் காட்டுகிறது என்று பெக்டாச்சே கூறுகிறார். எனவே, அடிக்கடி உடற்பயிற்சி செய்வது மன அழுத்தத்தை அதிகரிக்கும் மற்றும் மன ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:பருமனான பெண்கள் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதால் ரத்த கட்டிகள் ஏற்பட வாய்ப்பு

Last Updated : Nov 28, 2022, 4:08 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details