இயல்பாகவே கருச்சிதைவு, கருக்கலைதல் மற்றும் குழந்தை இறந்து பிறத்தல் போன்ற பிரச்னைகளுடன் பக்கவாதத்தை தொடர்புபடுத்த முடியாது. இதனை அறிய அதிகமான பெண்களின் உடல்நிலையைக் கண்காணிக்க வேண்டியிருக்கும். இந்நிலையில் உலகின் மிகப் பிரபலமான மருத்துவ இதழான பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் இது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
இது குறித்து பல பெண்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படவில்லை. இந்த ஆய்வின் மூலம் மலட்டுத்தன்மை, கருச்சிதைவு ஆகிய பிற உடல் நலப் பிரச்னைகள் பக்கவாதத்திற்கான ஆபத்தை அதிகரிக்கக்கூடும். இதில் எண்டோகிரைன் கோளாறுகள் (குறைந்த ஈஸ்ட்ரோஜன் அல்லது இன்சுலின் எதிர்ப்பு), வீக்கம், ரத்த ஓட்டத்தில் உதவும் எண்டோடெலியல் செல்கள், உளவியல் கோளாறுகள், ஆரோக்கியமற்ற நடத்தைகள் (புகைபிடித்தல் போன்றவை) அல்லது உடல் பருமன் ஆகியவை அடங்கும்.
அதிரவைக்கும் ரிப்போர்ட்:இந்த பத்திரிகை நடத்திய ஆய்வானது 32 முதல் 73 வயது வரை உள்ள 6,18,851 பெண்களிடம் நடத்தப்பட்டது. அவர்கள் செய்த ஆய்வில், 9,265 பெண்களுக்கு 2.8% பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்பும் மற்றும் 4,003 பெண்களுக்கு 0.7% அபாயகரமான பக்கவாதம் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் மேற்கொள்ளப்பட்டது.
இதில் ஒட்டுமொத்தமாக, 91,569 பெண்களுக்கு அதாவது 16.2% பேருக்கு கருச்சிதைவு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும் 24,873 பேர் (4.6%) குழந்தை இறந்து பிறந்ததற்கான தகவலும் கிடைத்துள்ளது. இதுவரை கர்ப்பமாக இருந்த பெண்களில், கருச்சிதைவு ஏற்படாத பெண்களுடன் ஒப்பிடும்போது, கருச்சிதைவு ஏற்பட்டதாகப் புகாரளித்த பெண்களுக்கு பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயம் 11% அதிகமாக உள்ளது.
ஒரு பெண்ணுக்கும் இரண்டுக்கும் மேற்பட்ட முறை கருச்சிதைவு ஏற்பட்டிருந்தால் அவருக்கு 35% பக்கவாதம் ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது. இதன் ஆய்வில் ஒரு ஆண்டிற்கு லட்சத்திற்கு 43 பெண்களும், மற்ற பாதிப்புகளான மலட்டுத்தன்மை பாதிக்கப்பட்ட பெண்கள் ஒரு ஆண்டிற்கு ஒரு லட்சத்தில் 53 பெண்களும் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர்.