தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'சாதிக்க வயது தடையில்லை': இமயமலைத்தொடர்களை கடக்கும் 50 வயதைத் தாண்டிய பெண்கள்! - இமயமலைத் தொடர்

பச்சேந்திரி பாலின் தலைமையில் 50 வயதைத்தாண்டிய பெண்கள் அடங்கிய குழுவினர் உலகிலேயே கடினமான மலைப்பயணங்களில் ஒன்றாக கருதப்படும் இமயமலைத் தொடர்களை கடந்து விரைவில் சாதனை புரிய உள்ளனர்.

சாதிக்க வயது தடையில்லை
சாதிக்க வயது தடையில்லை

By

Published : Jul 2, 2022, 12:15 PM IST

உத்ரகாண்ட்:சாதிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், வயதில் மூத்த 12 பெண்கள் அடங்கிய குழு ஒன்று உலகிலேயே கடினமான மலைப்பயணங்களில் ஒன்றாக கருதப்படும் இமயமலைத் தொடர்களைக் கடந்து விரைவில் சாதனை புரிய உள்ளது.

இந்தக்குழுவிற்கு மலை ஏற்றத்தில் சிறந்து விளங்கும் வீராங்கனையும், பத்மபூஷண் விருது பெற்றவருமான 67 வயதான பச்சேந்திரி பால் தலைமை தாங்குகிறார்.

இந்தக்குழு அருணாச்சலப் பிரதேசத்தில் இருந்து லடாக் வரை உள்ள 37 நீண்ட மலைத்தொடர்களை கடந்து 4 ஆயிரத்து 977 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கடக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.

இதுகுறித்துப்பேசிய பச்சேந்திரி பால், 'பிரதமர் நரேந்திரமோடியின் ஃபிட் இந்தியா இயக்கத்தின்கீழ் உடற்பயிற்சி, வாழ்க்கை முறை, மற்றும் பெண்களின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வை நாடு முழுவதும் பரப்பும் நோக்கில் இந்தப்பயணத்தை மேற்கொண்டுள்ளாம். மேலும் இந்தப்பயணத்தின் மூலம் அனைவரையும், ஊக்குவித்து அவர்களின் கனவை அடைய வயது ஒரு தடையில்லை என ஊக்கப்படுத்துதே எங்களுடைய குறிக்கோள்' என்றார்.

மகளிர் தினமான கடந்த மார்ச் 8ஆம் தேதி தொடங்கிய இந்த மலையேற்ற பயணம், ஜூன் 30ஆம் தேதி உத்ரகாண்ட்டை அடைந்த நிலையில் இந்தப்பயணம் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இக்குழுவில் உள்ள அனைவருக்கும் 50 வயது கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:புதிய கட்சியை பாஜகவில் இணைக்கும் அமரீந்தர் சிங்...?

ABOUT THE AUTHOR

...view details