தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நிறைவேறும் நீண்ட நாள் கனவு! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்றில் கடந்து வந்த பாதை என்ன? - நாரி சக்தி வந்தான்

Women Reservation Bil:1996ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மகளிருக்கான 33% இடஒதுக்கீடு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. இந்த மசோதா கடந்து வந்த பாதையை இங்கே காணலாம்.

women-reservation-bill-1996-to-2023-history
! மகளிர் இட ஒதுக்கீடு மசோதா வரலாற்றில் கடந்து வந்த பாதை என்ன

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 20, 2023, 3:02 PM IST

ஹைதராபாத்:27 ஆண்டுகளாக நிலுவைவில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 33 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993ஆம் ஆண்டு கிராம பஞ்சாயத்துகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்கள் பெண்களுக்கா ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட சட்டத்திருத்தத்தின் வாயிலாக தான் இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா முதன் முதலாக முன்வைக்கப்பட்டது.

மக்களவை கலைக்கப்பட்டதால் காலாவதியான மசோதா:நாடாளுமன்றம், சட்டப்பேரவை போன்றவற்றில் மகளிருக்கான உரிய அங்கிகாரம் வழங்குவதற்காக, மகளிர் இட ஒதுக்கீடு மசோதா கடந்த 1996ஆம் ஆண்டு முன்னால் பிரதமர் தேவகவுடா ஆட்சி காலத்தில் 81ஆவது சட்டத் திருத்த மசோதாவாகா தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போதிய ஆதரவு இல்லாமல் தோல்வி அடைந்தது. இதனையடுத்து நாடாளுமன்ற குழுவுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் அதே ஆண்டு மக்களவை கலைக்கப்பட்டதால் மசோதா காலாவதியானது.

மகளிர் மசோதாவின் கோப்புகளை கிழித்தெறிந்தனர்: பிறகு 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது இந்த மசோதா மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது ராஷ்டிரிய ஜனதாதளக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மகளிர் மசோதாவின் கோப்புகளை அவையிலேயே கிழித்தெறிந்தார். இட ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது அக்கட்சியின் நிலைப்பாடாகும்.

பிறகு 1999, 2002, 2003 ஆகிய ஆண்டுகளில் வெவ்வேறு அரசுகளால் இந்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. பல அரசுகள் போதுமான ஆதரவு இருந்தபோதும் மசோதா நிறைவேற்றப்படவில்லை. 2010ஆம் ஆண்டு மகளிர் மசோதா மாநிலங்கள் அவையில் நிறைவேற்றபட்டாலும் மக்களவையில் நிறைவேற்ற முடியவில்லை.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால்?:தற்போதுமக்களவையில் 15 விழுக்காட்டிற்கும் கீழாகவும், மாநிலங்களவையில் 14 விழுக்காட்டிற்கும் கீழாகவும் மகளிர் இடம்பெற்றுள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 10 விழுக்காட்டிற்கும் கீழான அளவிலேயே மகளிர் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு 2023ஆம் ஆண்டு (தற்போது) நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மகளிருக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை நிறைவேற்ற பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது.

எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டால், மக்களவையில் எம்பிகளின் 543 பேர் உள்ளனர்; இவர்களில் தற்போது 78 பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மகளிர் மசோதா நிறைவேற்றப்பட்டால் அவை 179 பெண் எம்பிகளாக உயரும், அதேபோல் மாநிலங்களவையில் மொத்தம் 245 எம்பிக்கள் உள்ளனர், இவர்களில் 11 பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ள்ணர். மசோதா நிறைவேற்றப்பட்டால் அவை 81 ஆக பெண் எம்பிக்களாக உயரும். இது நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வட்டாரங்கள்.

மகளிர் இட ஒதுக்கீடு எப்போது அமலுக்கு வரும்?:இந்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இதன்பிறகு நாட்டில் உள்ள மொத்த மாநிலங்களில் சுமார் 50 விழுக்காடு மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும். கடந்த 2021ஆம் ஆண்டிலேயே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த கணக்கெடுப்பு காலதாமதமாகி வருவதால். வரும் 2027ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன. புதிய தொகுதிகளின் அடிப்படையில் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அமல் செய்யப்படும். இதன்படி வரும் 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போதுதான் மசோதா அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. சட்ட மசோதா அமலுக்கு வந்த பிறகு 15 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:Parliament Special Session : மகளிர் இடஒதுக்கீடு மசோதா! மக்களவையில் என்ன நடக்கப்போகுது?

ABOUT THE AUTHOR

...view details