ஆந்திராவைச் சேர்ந்த பெண் காவலர் சந்திரலேகா கோயம்புத்தூரில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் நான்கு தங்க பதக்கங்களை வென்றார். பெண்கள் சீனியர் பிரிவில் போட்டியிட்ட சந்திரலேகா அடுத்தடுத்த போட்டிகளில் அவரது திறமை மூலம் பதக்கங்களை குவிக்கத் தொடங்கினார். பெண்கள் 76 கிலோ மற்றும் 250 கிலோ பிரிவில் முதலில் தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கபதக்கங்களை குவித்த பெண் காவலர்-ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாதனை - தங்கபதக்கங்களை குவித்த பெண் காவலர்
கோயம்புத்தூரில் நடந்த ஆசிய பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்ட பெண் காவலர் ஒருவர் நான்கு தங்க பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளார்.
![தங்கபதக்கங்களை குவித்த பெண் காவலர்-ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாதனை தங்கபதக்கங்களை குவித்த பெண் காவலர்-ஆசிய பளுதூக்கும் போட்டியில் சாதனை](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-15633866-thumbnail-3x2-aandhtra.jpg)
இதனையடுத்து 107.5 கிலோ எடையை அலேக்காக தூக்கி அசத்தினார். 212.5 கிலோ பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். 525 கிலோ எடைப்பிரிவில் சந்திரலேகா முதல் இடம் பிடித்தார். இறுதியாக நான்கு தங்க பதக்கங்களை வென்றார். விஜயவாடாவை சேர்ந்த சந்திரகலா நிடமனூர் கலால் டிப்போவில் பணியாற்றி வருகிறார். இவரது சாதனைக்கு மாநில பவர் லிஃப்டிங் சங்கம் உட்பட கலால் துறை அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க:சாதிக்க ஊனம் தடையில்லை என நிரூபித்த இளைஞரை ஊர் மக்கள் கூடி வரவேற்றனர்!