தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சொத்துத் தகராறில் அண்ணன் மனைவியைக் கொன்ற தம்பி! - women died due to land dispute

ஹைதராபாத்: சங்காரெட்டியில் ஒருவர் சொத்துத் தகராறில் அண்ணன் மனைவியை தேங்காய் வெட்டும் அரிவாளால் வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

brutally murdered
ஹைதராபாத்

By

Published : Mar 22, 2021, 7:44 PM IST

தெலங்கானா மாநிலம் சங்காரெட்டியில் பாஸ்தாபூர் பகுதியில் வசித்துவந்தவர் ஷபனா பேகாம். இவரின் கணவர் ஜஹாங்கிருக்கும், அவரது தம்பிகளுக்கும் இடையே சொத்துத் தகராறில் சண்டை வந்துள்ளது. அப்போது, அங்குக் கணவரின் தம்பிகளுடன் ஷபனா, வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

சொத்துத் தகராறில் அண்ணன் மனைவியைக் கொன்ற தம்பி!

ஒருகட்டத்தில், ஜஹாங்கிரின் தம்பி காசா, ஷபனாவை தேங்காய் வெட்டும் அரிவாளால் வெட்டியுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷபனாவை, அருகிலிருக்கும் மருத்துவமனையில் குடும்பத்தினர் சேர்த்தனர். ஆனால், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமறைவாகவுள்ள காசாவைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

இதையும் படிங்க:எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் 17 லட்சம் திருட்டு!

ABOUT THE AUTHOR

...view details