போபால்:மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் விமான நிலையத்தில் இருந்து இன்று, துபாய் செல்லும் விமான பயணிகளுக்கு கரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, 30 வயதுடைய பெண் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், அந்தப் பெண்ணை, விமான நிலைய அலுவலர்கள் துபாய் செல்ல அனுமதிக்கவில்லை. இதுகுறித்து, இந்தூர் சுகாதாரத்துறை தலைமை அலுலவர் கூறுகையில், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பெண் துபாயை சேர்ந்தவர். 12 நாள்களுக்கு முன்பு இந்தூருக்கு வந்து இன்று மீண்டும் துபாய்க்கு செல்ல இருந்தார்.