கோட்டயம்:கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டத்தில் உள்ள கருகாச்சல் பகுதியில், இளம்பெண் ஒருவர் தனது நண்பருடன் காவல் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தார். காவல் நிலையத்திற்குள் நுழைவதற்கு முன்பாக, அகில் என்ற இளைஞர் அவர்களை வழிமறித்து, அந்த பெண்ணை கத்தரிக்கோலால் குத்தமுயன்றார். அந்த பெண்மணி அதைத்தடுக்கவே, அவரது கையில் கத்தரிக்கோல் குத்தியது.
உடனடியாக அந்தப்பெண் அலறியபடி காவல் நிலையத்திற்குள் ஓடினார். விரைந்து வந்த காவலர்கள் பெண்ணை தாக்கிய இளைஞரைப் பிடித்து வந்தனர். முதற்கட்ட விசாரணையில், தாக்குதல் நடத்திய அகில், பாம்பாடியைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அந்த இளம்பெண்ணின் முன்னாள் நண்பர் என்பதும் தெரியவந்தது. லேசான காயமடைந்த அந்தப் பெண்ணுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.