தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

காதலியை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற இளைஞன்: கேரளாவில் பயங்கரம் - நெடுமங்காட்டை

கேரளாவில் காதலியின் வீட்டிற்குள் புகுந்த இளைஞன், அவரை 17 முறை கத்தியால் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காதலி
காதலி

By

Published : Aug 31, 2021, 11:31 AM IST

திருவனந்தபுரம்: கேரளாவில் நெடுமங்காடு பகுதியில் வசித்துவந்தவர் சூரியகாயத்திரி (20). இவர் தனது கணவருடன் சண்டை போட்டுவிட்டுப் பெற்றோருடன் இருந்தார். இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 30) அதிகாலை 2.30 மணியளவில், சூரியகாயத்திரியின் வீட்டிற்குள் அவரது நண்பர் அருண் பின்புற கதவு வழியாக நுழைந்துள்ளார். பின்னர் அங்கிருந்த சூரியாவை, சரமாரியாகக் கத்தியால் 17 முறை குத்தியுள்ளார்.

சூர்யாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாயாரையும், தந்தையையும் கத்தியால் தாக்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் வருவதைப் பார்த்ததும், அருகிலிருந்த வீட்டிற்குள் அருண் தப்பியோடியுள்ளார். இருப்பினும், அவரை விரட்டிச் சென்ற அண்டை வீட்டுக்காரர்கள், பக்கத்து வீட்டு கழிவறையில் மறைந்திருந்த அருணை கையும் களவுமாகப் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

காதலன் அருண் கைது

ரத்த வெள்ளத்தில் கிடந்த மூவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில், சூர்யகாயத்திரி இன்று காலை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் அருணை கைதுசெய்தனர்.

கிடைத்த தகவலின்படி, அருணும், சூர்யாவும் காதலித்துவந்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில் சூர்யா மற்றொரு நபரை காதலித்து திருமணம் செய்துள்ளார். ஆனால், எதிர்பார்த்தபடி திருமண வாழ்க்கை அமையவில்லை. இதன் காரணமாக தாயார் வீட்டிற்கு வந்துள்ளார்.

இதையடுத்து, அவ்வப்போது சூர்யாவும் அருணும் நேரில் சந்திக்கும்போது சண்டையிட்டுவந்ததாகவும் கூறப்படுகிறது. அருணை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்த பிறகே, உண்மையான காரணம் தெரியவரும் எனக் காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

இதையும் படிங்க:பெங்களூரு கோர விபத்து: திமுக எம்எல்ஏவின் மகன் உள்பட 7 பேர் மரணம்

ABOUT THE AUTHOR

...view details