லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சதத்கஞ்ச் பகுதியில் கார்ட்டூன் பார்ப்பதை தாய் கண்டித்ததால் மனமுடைந்த 15 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த பகுதியை சேர்ந்த ராஜேஷ் திவாரி-ரூமிகா தம்பதிக்கு ஆயுஷ்மான்(15) மற்றும் அன்ஷுமான் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.
சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜேஷ் திவாரி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அதன்பின் ரூமிகா மகன்களை கவனித்துவந்தார். இந்த நிலையில் நேற்றிரவு (பிப்.6) ஆயுஷ்மான்(15) டிவியில் கார்ட்டூன் பார்த்துள்ளார். அப்போது சகோதரர் அன்ஷுமான் வேறு சேனல் மாற்றுமாறு கேட்டுள்ளார். ஆனால், ஆயுஷ்மான் மாற்றவில்லை.
இதனால் இருவரும் சண்டையிட்டுக்கொண்டனர். அப்போது, ஆயுஷ்மானை அன்ஷுமான் கன்னத்தில் அறைந்துள்ளார். இந்த சத்தம் கேட்டு வந்த தாய் ரூமிகா அவர்களை சமாதானம் செய்யாமல், ஆயுஷ்மானை தானும் 2 முறை அறைந்துள்ளார். இதனால் மனமுடைந்த ஆயுஷ்மான்அறைக்குள் புகுந்து கொண்டு கதவை தாழ்ட்டுக்கொண்டார்.