பெங்களூரு:கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் பெற்ற குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்த ஜோதி என்னும் பெண் இன்று (டிசம்பர் 7) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் முலபாகிலு என்னும் இடத்தில் நடந்துள்ளது. இதுகுறித்து போலீசார் தரப்பில், "ஆந்திர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சேர்ந்த ஜோதி கோலாரில் வசித்துவருகிறார். இவர் தனது 2 குழந்தைகளுடன் தற்கொலை செய்ய முடிவு செய்துள்ளார்.
இதற்காக அதிகாலையில் அஞ்சனாத்ரி மலை பகுதிக்கு சென்று, முதலில் குழந்தைகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் ஒரு குழந்தை உடல் கருகி உயிரிழந்தது. மற்றொரு குழந்தை கவலைக்கிடமாக கிடந்துள்ளது. இதனிடையே ஜோதியை தேடி சம்பவயிடத்துக்கு விரைந்த உறவினர்கள் குழந்தைகளுக்கு தீ வைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதன்பின் போலீசாருக்கும், ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் கொடுத்தனர்.