தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பள்ளி பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது! - கர்நாடகாவில் பாலியல் வன்கொடுமை

பெங்களூருவில் பள்ளி பேருந்தில் வைத்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த, தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

Woman
Woman

By

Published : Dec 1, 2022, 6:44 PM IST

பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 29ஆம் தேதி மாலையில், தனியார் பள்ளி பேருந்து ஓட்டுநர் சிவக்குமார், வழக்கம்போல் பள்ளிக்குழந்தைகளை இறக்கிவிட்டு திரும்பி சென்றுள்ளார். நாயண்டஹள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, வழியில் நடந்து சென்ற பெண்மணி ஒருவரை, சொட்டு மருந்து போடுவதாக கூறி பேருந்தில் ஏற்றியுள்ளார்.

சிறிது தூரம் சென்ற பிறகு, சர்வீஸ் சாலையில் பேருந்தை நிறுத்தி, பெண்மணியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த பெண்மணியை அங்கேயே விட்டுவிட்டு, பேருந்துடன் சிவக்குமார் தப்பிச் சென்றுவிட்டார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்மணி பேருந்தை செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளார்.

பின்னர் அந்த பெண்மணி இது தொடர்பாக சந்திராலே அவுட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், ஓட்டுநர் சிவக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க:மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மாணவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details