ஏழை மக்களுக்கு குறைந்த வகையில் வீடுகளைக் கட்டித் தரும் வகையில் ’பிரதம மந்திரி அவாஸ் யோஜனா’ திட்டம் கடந்த 2015ஆம் ஆண்டு, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. பிரதம மந்திரி அவாஸ் யோஜனா - கிராமம், நகர்ப்புறம் என இருவகையாக பிரிக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் நோக்கம், 2022ஆம் ஆண்டுக்குள் இரண்டு கோடி வீடுகளை வழங்குவதாகும்
இந்நிலையில், இந்தத் திட்டத்தின் கீழ் வீடு கிடைத்த பெண் ஒருவர், சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்கும் புகைப்படத்துடன் கூடிய அரசு விளம்பரம் ஒன்று, சில நாட்களுக்கு முன்னர் செய்தித்தாள்களின் முதல் பக்கத்தில் இடம்பெற்றிருந்தது. அதில், பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் அப்பெண்ணுக்கு வீடு கிடைத்ததாகவும், மேலும், அவரைப் போல் 24 குடும்பங்கள் பயனடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.